உதயமாகிறது இடைக்கால அரசு! – கோட்டா, மஹிந்த பச்சைக்கொடி

கோட்டா மஹிந்த

நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய வகையில் இடைக்கால அரசொன்றை அமைப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் இணக்கம் வெளியிட்டுள்ளனர்.

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச எம்.பி. இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

11 கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நேற்று சந்திப்பு இடம்பெற்றது. இந்நிலையில், இன்று பிரதமரை மேற்படி தரப்பினர் சந்தித்துப் பேச்சு நடத்தினர். இந்தச் சந்திப்பின் பின்னரே விமல் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

#SriLankaNews

Exit mobile version