மக்களின் அவலத்துக்கு கோட்டாவே காரணம்! – சுதர்ஷனி குற்றச்சாட்டு

Sudarshani Fernandopulle

நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் அவலத்துக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே காரணம் என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே குற்றஞ்சாட்டியுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று நோயை ஒழிக்கும் பொறுப்பை ஏற்று செயற்பட்டு வந்த கொரோனாத் தடுப்பு இராஜாங்க அமைச்சராகப் பணியாற்றிய சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தற்போது அரசில் இருந்து விலகியுள்ள சுயாதீன அணியில் எதிர்க்கட்சி வரிசையில் இருந்து வருகின்றார்.

சிங்களப் பத்திரிகை ஒன்று பேட்டியளித்துள்ள சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே,

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தவறான முடிவுகள் காரணமாகவே 22 மில்லியன் மக்கள் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

தலைவலிக்குத் தலையணை மாற்றுவது போல் புதிய அமைச்சரவையை நியமித்துள்ளதன் மூலம் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்காது.

அனைத்துக் கட்சிகளும் இணைந்து இடைக்கால நிர்வாகத்தை உருவாக்கி இந்தப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

#SriLankaNews

Exit mobile version