“இந்த நாட்டின் சிறந்த தலைவரே கோட்டாபய ராஜபக்ச. தற்போதைய நெருக்கடி நிலைமையிலிருந்து நாட்டை அவர் மீட்டே தீருவார். பதவி விலகும் எண்ணம் அவருக்கு இல்லை.”
– இவ்வாறு நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைப் பதவி விலகுமாறு எதிர்க்கட்சிகளும், எதிர்க்கட்சிகளின் ஆதரவாளர்களுமே கோருகின்றனர். ஜனாதிபதிக்கு ஆணை வழங்கிய மக்கள் எவரும் அவரைப் பதவி விலகுமாறு கோரவில்லை.
இதேவேளை, ராஜபக்ச சகோதரர்களுக்குக் களங்கத்தை ஏற்படுத்தும் விதத்தில் சில ஊடகங்கள் செய்திகளை வெளியிடுகின்றன. அந்த ஊடகங்கள் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும்.
உண்மைச் செய்திகளை வெளியிட்டால் அவற்றை நாம் வரவேற்போம். அதைவிடுத்துப் போலிச் செய்திகளை வெளியிட்டு மக்களைக் குழப்ப வேண்டாம்.
இந்த நாட்டை முன்னேற்ற ராஜபக்ச சகோதரர்கள் ஓரணியில் பயணிக்கின்றனர். எமது பயணம் வெற்றியடைய ஆளுந்தரப்பில் உள்ள அனைவரும் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்” – என்றார்.
#SriLankaNews
Leave a comment