திருகோணமலை மீனவருக்கு அடித்தது அதிர்ஷ்டம்!

திருகோணமலை கொட்பே கடற்கரை பிரதேசத்தில் மீனவர் ஒருவரின் கரைவலையில் சுமார் 15 லட்சத்துக்கும் அதிகமாக பாரை மீன்கள் பிடிபட்டுள்ளன.

இவை 3000 கிலோவுக்கும் அதிகமாக காணப்படுகின்றன எனத் தெரிவிக்கப்படுகிறது.

அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த ஜெயா பேபி என்பவரின் கரைவலையிலேயே இவ்வாறு அதிகளவிலான மீன்கள் சிக்கியுள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக மீனவர்களை கடலுக்கு செய்வதை தவிர்க்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பெரும் கஷ்டத்தில் இருந்த மீனவர்களுக்கு இந்த அதிர்ஷ்டம் அடித்துள்ளது என மீனவர்கள் தெரிவிக்கின்றன.

777

Exit mobile version