இரண்டு இலட்சத்தை தொடும் தங்கத்தின் விலை: நகை வாங்கவுள்ளவர்களுக்கான தகவல்

24 661e28448b5e2

இரண்டு இலட்சத்தை தொடும் தங்கத்தின் விலை: நகை வாங்கவுள்ளவர்களுக்கான தகவல்

22 கரட் தங்கப் (Gold) பவுணொன்றின் விலை 184,550 ரூபாவாக பதிவாகியுள்ளது.

நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டுவரும் நிலையில் இன்று (16.04.2024) இந்த விலை பதிவாகியுள்ளது.

இதன்படி, 24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 25,160 ரூபாவாக உள்ளது.

இதேவேளை 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 201,300 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 23,070 ரூபாவாகவும், 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 184,550 ரூபாவாகவும் காணப்படுகிறது.

மேலும், 21 கரட் 1 கிராம் தங்கம் 22,020 ரூபாவாகவும் , 21 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 176,150 ரூபாவாகவும் அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் தங்கத்தின் விலையானது இரண்டு இலட்சத்தை தொட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் தங்கத்தின் விலையில் வரலாறு காணாத அதிகரிப்பு பதிவு செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version