காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்கள் ஜனாதிபதி செயலகத்தை வைத்து இன்றிரவு சாகசம் புரிந்துள்ளனர்.
தொழில்நுட்ப முறைமையைப் பயன்படுத்தி ஜனாதிபதி செயலகத்தை மின்னொளியில் ஒளிரச் செய்து ராஜபக்சக்கள் அணியும் சால்வையை ஜனாதிபதி செயலகத்துக்கு தொழில்நுட்ப முறையில் சாத்தி இருந்தனர்.
அதுமாத்திரமின்றி எதிர்ப்பு வாசகங்களும் ஜனாதிபதி செயலகத்தில் பிரதிபலிக்கும் வகையில் அந்தத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டிருந்தது.
காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற தொழில்நுட்பத்துறையில் பாண்டித்தியம் பெற்றுள்ள இளைஞர்களாலேயே இந்தச் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
#SriLankaNews