மிருசுவிலில் மூவரை பலி எடுத்தது ரயில்!!!

யாழ்., கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மிருசுவில் பகுதியில் இன்று இடம்பெற்ற ரயில் – பட்டா ரக வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பரிதாபகரமாக சாவடைந்தனர்.

கொடிகாமம், தவசிக்குளம் பகுதியைச் சேர்ந்த நாகமணி தயாபரன் (வயது 45), அவரின் மகன்களான தயாபரன் ஜனுசன் (வயது 12), தயாபரன் தனுஷன் (வயது 15) ஆகியோரே உயிரிழந்தனர்.

ஜனுசன் சம்பவ இடத்திலேயே பலியானார். அவரின் சகோதரரும் தந்தையும் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்தனர்.

காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயிலுடன் மிருசுவில் வைத்தியசாலைக்கு அண்மையிலுள்ள ரயில் கடவையில் பட்டா ரக வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.

இந்தச் சம்பவத்தில் பட்டா ரக வாகனத்தைச் செலுத்திச் சென்ற தந்தையும், அவருடன் பயணித்த இரு மகன்களும் உயிரிழந்தனர்.

278525700 458935962666007 2207375283964387006 n  

#SriLankaNews

Exit mobile version