மட்டு. மாநகர சபையில் ஜேர்மன் எம்.பி.

IMG 20220416 WA0003

“இலங்கை பொருளாதார நெருக்கடிக்குள் வீழ்ந்திருப்பதன் காரணத்தால் மத்திய அரசின் மூலமான அபிவிருத்திகளை மட்டக்களப்பு மாநகர சபை எதிர்பார்க்க முடியாது. ஆகவே, மட்டு. மாநகர சபையின் அபிவிருத்தியில் ஜேர்மன் பங்காளியாக இணைந்துகொள்ள வேண்டும்.”

– இவ்வாறு மட்டக்களப்பு மாநகர சபை மேயர் தி.சரணபவன் கோரிக்கை விடுத்தார்.

ஜேர்மன் நாடாளுமன்ற உறுப்பினர் மோஹாத் இன்று மட்டக்களப்பு மாநகர சபைக்கு விஜயம் மேற்கொண்டார். இதன்போதே மாநகர சபையின் மேயர் மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்தார்.

ஜேர்மன் எம்.பி. இந்த விஜயத்தின்போது மட்டக்களப்பு மாநகர சபைக்கு உடன்படிக்கையின் கீழ் 2003ஆம் ஆண்டு அன்பளிப்பு செய்யப்பட்ட வாகனங்களையும் பார்வையிட்டார்.

குறித்த வாகனங்கள் சிறந்த முறையில் பராமரிக்கப்படுகின்றமை தொடர்பில் மேயருக்குத் தனது பாராட்டுகளை அவர் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து மாநகர சபையின் மண்டபத்தில் மாநகர சபை மேயர், உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகத்தர்களை அவர் சந்தித்துக் கலந்துரையாடினார்.

கடந்த காலத்தில் ஜேர்மன் முனீச் மாநகர சபையால் மட்டக்களப்பு மாநகர சபையில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திப் பணிகள் மற்றும் உதவிகளுக்கு நன்றி தெரிவித்த மட்டக்களப்பு மாநகர சபை மேயர் சரவணபவன், எதிர்காலத்தில் ஜேர்மன் அரசு ஊடாக ஒப்பந்தங்களைச் செய்து மேலும் அபிவிருத்திப் பணிகளை எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.

#SriLankaNews

Exit mobile version