இனப்படுகொலை! – முள்ளிவாய்க்கால் நோக்கி ஊர்திப்பவனி ஆரம்பம்

தமிழினப் படுகொலையைச் சித்திரிக்கும் விதமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து ஊர்திப்பவனியொன்று ஆரம்பமாகியது.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரம் தற்போது இடம்பெற்றுவரும் நிலையில் இந்த ஊர்திப்பவனி ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் சென்று இறுதியாக முள்ளிவாய்க்காலை சென்றடையவுள்ளது.

“தமிழினப் படுகொலைக்கு சர்வதேச குற்றவியல் விசாரணை வேண்டும், தேசம், இறைமை, சுயநிர்ணயம் அங்கீகரிக்கப்பட்ட சமஸ்டி வேண்டும்” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் கட்டப்பட்டு இனப்படுகொலை நினைவுத்தூபி வைக்கப்பட்டுள்ள நிலையில், வீதிகளில் பயணித்த பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் சாவகச்சேரி, கொடிகாமம் பருத்தித்துறை, நெல்லியடி, வல்வெட்டித்துறை போன்ற பல்வேறு பகுதிகளுக்கும் இந்த ஊர்திப் பவனி பயணித்தது.

இந்த ஊர்திப்பவனியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் செல்வராசா கஜேந்திரன் உட்பட கட்சியின் உறுப்பினர்கள் பலரும் பங்கேற்றனர்.

IMG 20220515 WA0070

#SriLankaNews

Exit mobile version