8 13
இலங்கைசெய்திகள்

கசிப்பு விநியோக கருத்து! பிமல் ரத்நாயக்கவை சாடிய கீதநாத்

Share

மதுபானசாலை அனுமதிப் பட்டியலை வெளியிட்டிருந்தால் அமைச்சர் பிமல் ரத்நாயக்க கசிப்பு விநியோகம் குறித்து நாடாளுமன்றத்தில் அழத்தேவையில்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட பிரதான அமைப்பாளர் கீதநாத் காசிலிங்கம் தெரிவித்துள்ளார்.

வன்னி மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி தேர்தலில் வெல்வதற்காகக் கசிப்பு விநியோகம் செய்துள்ளது எனும் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் கருத்துக் குறித்து பதிலளித்தபோதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இது தொடர்பாக கீதநாத் காசிலிங்கம் மேலும் தெரிவிக்கையில்,

“அமைச்சர் பிமல் ரத்நாயக்க தற்போது நாடாளுமன்றச் சிறப்புரிமையின் பின்னால் ஒளிந்து கொண்டு, வாக்குகளை வெல்ல “தமிழ்க் கட்சிகள் கசிப்பு மற்றும் இலஞ்சம்” வழங்குகின்றார்கள் எனக் குற்றம் சுமத்துகின்றார்.

ஆனால், இதே பிமல் ரத்நாயக்க சார்ந்த தேசிய மக்கள் சக்தி, கடந்த அரசின் கீழ் மதுபான அனுமதிகள் பெற்ற சில வடக்கு எம்.பிக்களின் பட்டியலை வெளியிடப் போவதாகத் தேர்தலுக்கு முன் வாக்களித்தது.

இப்போது, அந்தப் பட்டியலை வெளியிடுவதை அவர் சார்ந்திருக்கும் தேசிய மக்கள் சக்தியே தடுக்கின்றது. குறித்த பட்டியல் வெளியாகியிருந்தால், இன்று பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் அழ வேண்டிய நிலைக்கு வந்திருக்கமாட்டார்.

இன்னும் தாமதமாகிவிடவில்லை. நீங்கள் வாக்குறுதி செய்தபடி அந்தப் பட்டியலை வெளியிடுங்கள்.” என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...