தட்டுப்பாடின்றி இனி எரிவாயு கிடைக்கும்!

2020 08 04

கொழும்பு துறைமுகத்துக்கு லிட்ரோ நிறுவனத்துக்கு சொந்தமான 4 ஆயிரம் மெட்ரிக் தொன் திரவ எரிவாயு வந்தடைந்துள்ளது.

இதனால் நாடுமுழுவதும் தட்டுப்பாடின்றி எரிவாயுவை விநியோகிக்க முடியும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதாக பல இடங்களில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தன.
தற்காலிகமாக ஏற்பட்டிருந்த இந்தத் தட்டுப்பாடு தற்போது நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது என அந்த நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

விநியோக செயற்பாட்டில் ஏற்பட்ட தாதமம் காரணமாக தற்போது நாட்டில் எரிவாயுவுக்கான தட்டுப்பாடு நிலவியது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

#srilanka

Exit mobile version