சமையல் எரிவாயு கசிவுடனான வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழுவின், பரிசோதனை அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் இன்று கையளிக்கப்படவுள்ளது.
நாட்டில் பல பகுதிகளிலும் இடம்பெற்ற எரிவாயு வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதியால் கடந்த மாதம் 30 ஆம் திகதி எட்டு பேரடங்கிய இந்த நிபுணர் குழு அமைக்கப்பட்டது.
அனைத்து தரப்பினர்களின் ஆலோசனைகளைப் பெற்று, இரண்டு வாரகாலத்துக்குள், விபத்துக்கான காரணம் மற்றும் அதற்கான தீர்வு
ஆகியவற்ற உள்ளடக்கிய அறிக்கையை சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.