சமையல் எரிவாயு வெடிப்பு தொடர்பாக ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி குழு தனது இறுதி அறிக்கையை தயாரித்துள்ளது.
இது தொடர்பில் மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சாந்த வல்பொலகே குறிப்பிடுகையில், அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பதற்கான திகதி மற்றும் நேரத்தை கோரியுள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும் , இந்த வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் எரிவாயு நிறுவனங்கள் – தரநிலைகள் பணியக அதிகாரிகள் – நுகர்வோர் உட்பட சுமார் 40 தரப்பினரிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
#SriLankaNews