யாழில் எரிவாயு விநியோகஸ்தர் – பொதுமக்கள் முரண்பாடு! – பொலிஸார் தலையீட்டால் நிலைமை கட்டுக்குள்

யாழ்ப்பாணம் – பரமேஸ்வரா சந்தியில் எரிவாயு விநியோக நிலையத்தில் எரிவாயு பெற வந்த பொதுமக்களுக்கும் எரிவாயு விநியோகஸ்தருக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டு கோப்பாய் பொலிஸார் தலையீட்டினால் நிலைமை சுமுகமானது.

நேற்று இரவு பரமேஸ்வராந்தி எரிவாயு விநியோகஸ்தரிடம் எரிவாயு வந்திறங்கியதாக பொது மக்களுக்கு கிடைத்த தகவலை அடுத்து இன்று அதிகாலை முதல் குறித்த எரிவாயு விநியோக அலுவலகத்திற்கு முன்னால் பொதுமக்கள் எரிவாயு பெறுவதற்கு ஒன்று கூடி இருந்த நிலையில் எரிவாயு விநியோகஸ்தர் எரிவாயு இல்லை என தெரிவித்த போது பொதுமக்கள் முரண்பாட்டில் ஈடுபட்டனர் அத்தோடு வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதனையடுத்து அவ்விடத்திற்கு விரைந்த கோப்பாய் பொலிஸார் அங்கு கூடியிருந்த பொதுமக்களை விநியோக நிலையத்திற்குள் அழைத்துச் சென்று அங்கு ஏதாவது எரிவாயு கொள்கலனை இருக்கின்றதா என பரிசோதித்த பின் நிலைமை சுகமானது.

IMG 20220524 WA0040

 

#SriLankaNews

Exit mobile version