கட்டுப்பாடுகளுடன் எரிவாயு விநியோகம்!

LITRO

எதிர்வரும் புதன்கிழமை வரை கட்டுப்பாடுகளுடன் எரிவாயு சந்தைக்கு வெளியிடப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

திருவிழாக் காலங்களில் அதிக தேவை காணப்படுவதாலும், எரிவாயு கப்பல்கள் நாட்டுக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டமையே இதற்குக் காரணம் என அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், எதிர்வரும் 30ஆம் திகதிக்குள் சில எரிவாயுக் கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாகவும், எரிவாயுவை தரையிறக்கிய பின்னர் வழமை போன்று வாயு வெளியேற்றம் மேற்கொள்ளப்படும் எனவும் முதித பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

#SriLankaNews

Exit mobile version