இன்று முதல் இலங்கையின் பிரதான எரிவாயு நிறுவனங்களான லிட்ரோ மற்றும் லாப்ஸ் நிறுவனங்கள் எரிவாயு விநியோகத்தை இடைநிறுத்த தீர்மானித்துள்ளன.
விநியுாகத்திற்கு தேவையான போதியளவு எரிவாயு தம்வசம் கிடைக்காமையே இதற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் எரிவாயுவை விநியோகிப்பதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
#SrilankaNews