ஆடைத்தொழிற்சாலை மூடப்படுவது சாதாரண விடயமே

25 6838fd3acddfc

ஆடைத்தொழிற்சாலைகள் மூடப்படுவது சாதாரண விடயமே என ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமசந்திர தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி அரசியல் விவாதமொன்றில் பங்குபற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நெக்ஸ்ட் ஆடைத் தொழிற்சாலை மூடப்பட்ட விவகாரம் தேவையற்ற வகையில் அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கைத்தொழிற்சாலைகள் மூடப்படுவதும் திறக்கப்படுவதும் சாதாரண விடயமே இதனை தேவையின்றி அரசியல் மயப்படுத்தக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

நிறுவனங்களின் தீர்மானத்திற்கு அமையே இந்த நிறுவனங்கள் மூடப்படுவதாகவும் கடந்த ஆண்டிலும் கொக்கல பகுதியில் ஆடைத்தொழிற்சாலையொன்று மூடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

கைத்தொழிற்சாலைகள் மூடப்படுவதனால் முதலீடுகள் வெளியே செல்வதாக கருதப்பட முடியாது எனவும் நிறுவனங்கள் வியாபார ரீதியான தீர்மானங்களின் அடிப்படையில் மூடப்படுவதாகவும் லக்மாலி ஹேமசந்திர தெரிவித்துள்ளார்.

Exit mobile version