கஞ்சா ஏற்றுமதிக்கு விரைவில் அனுமதி!

parli

கஞ்சா ஏற்றுமதியை சட்டப்பூர்வமாக்குவதற்கான சட்டங்களை உருவாக்ககோரும் அமைச்சரவைப் பத்திரம் அடுத்த மாதம், அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

கஞ்சா உற்பத்தி மூலம் நாடு பாரிய ஏற்றுமதி வருமானத்தை ஈட்ட முடியும் என்றும் எதிர்வரும் 5 ஆம் திகதிக்குள் இதற்கான ஆவணத்தை வகுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு மருத்துவம் மற்றும் ஆயுர்வேத நடைமுறைகளை மேம்படுத்துவதன் மூலம் இலங்கையினால் சுமார் 3 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்ட முடியும் என்றும் இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

ஆகவே கஞ்சா ஏற்றுமதி மீதான கட்டுப்பாடுகளை நீக்குவது தொடர்பாக அண்மைய நாட்களில் நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் பரவலாக கலந்துரையாடப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

#SriLankaNews

Exit mobile version