காதல் உறவை முறிக்க பெண் ஒருவர் மோசமான செயல்

tamilni 316

காதல் உறவை முறிக்க பெண் ஒருவர் மோசமான செயல்

காதலர் தினமான நேற்றைய தினம் பெண் ஒருவர் தனது கணவரின் உதவியுடன் முன்னாள் காதலனை அடித்து இரண்டு கால்களையும் உடைத்த சம்பவமொன்று பதிவாகியுள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தொடநடுவ பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் காலி தொழில்நுட்பக் கல்லூரியில் கல்வி கற்கும் போது ஹிக்கடுவ பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவருடன் காதல் உறவை பேணிவந்துள்ளார்.

தொழில்நுட்பக் கல்லூரியில் பட்டம் பெற்ற பிறகும் அவர்கள் சில காலம் காதல் உறவில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதன்பின்னர் குறித்த பெண் வேறொருவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், அவரது பழைய காதலரும் அவருடன் உறவைப் பேணி வந்துள்ளார்.

எனினும், அடிக்கடி தொலைபேசி அழைப்புகள் வருவது பிரச்சினையாக மாறியமையினால் கணவரின் உதவியுடன் தனது முன்னாள் காதலனின் தொலைபேசி அழைப்பிற்கு அன்பாக பதிலளித்து கடற்கரைக்கு வரவழைத்து நிர்வாணமாக்கி இரண்டு கால்களையும் அடித்து உடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Exit mobile version