3 41
இலங்கைசெய்திகள்

ஒன்றரை கோடி ஒப்பந்தம் ;கனேமுல்ல சஞ்சீவ கொலையில் வெளிவரும் பகீர் தகவல்

Share

ஒன்றரை கோடி ஒப்பந்தம் ;கனேமுல்ல சஞ்சீவ கொலையில் வெளிவரும் பகீர் தகவல்

கொழும்பு – புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல் கும்பலைச் சேர்ந்த கனேமுல்ல சஞ்சீவ  சுட்டுக்கொலை செய்யப்பட்ட  சம்பவத்தில் பொலிஸார் மேலதிக தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

கனேமுல்ல சஞ்சீவ என்ற பாதாள உலகத் தலைவரை அளுத்கடை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் 5வது நீதிமன்ற அறையில் சாட்சிக் கூண்டில் வைத்து கொல்வதற்கு ஏற்பாடு செய்த கொலையாளி அதை ஒன்றரை கோடி ரூபாய்க்கு செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

துபாயில் இருந்து இந்த ஒப்பந்தத்தை கொடுத்த நபர், முன்பணமாக இரண்டு லட்சம் ரூபாயை வழங்கியுள்ளார்.

கொலைக்குப் பிறகு அவர் கல்பிட்டி பகுதியில் இருந்து கடல் வழியாக இந்தியாவுக்கு தப்பிச் செல்லத் தயாராக இருந்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் நடத்திய திடீர் நடவடிக்கையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் ஐஸ் போதைப்பொருளுக்கு கடுமையாக அடிமையானவர் என்றும், அதற்கு தேவையான பணத்தை தேட அவர் இதுபோன்ற பாதாள உலக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவருக்கு ஒப்பந்தம் கொடுத்தவர்களே அவர் தப்பிப்பது குறித்து பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கொடுத்ததாகவும் அதிகாரப்பூர்வமற்ற அறிக்கைகள் கூறுகின்றன.

புத்தளம் பாலாவி பகுதியில் அவர் கைது செய்யப்பட்டபோது, வழக்கறிஞர் என்று கூறி வழக்கறிஞர் அடையாள அட்டையையும் பொலிஸாருக்கு காட்டியுள்ளார்.

ஆனால் அவரது நடத்தையில் சந்தேகம் அடைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளுக்குப் பிறகு அவரைக் கைது செய்துள்ளனர்.

நேற்றையதினம் காலை வழக்கு ஒன்றுக்காக கனேமுல்ல சஞ்சீவ நீதிமன்றம் அழைத்து வரப்பட்ட நிலையில் சுட்டுக்கொல்லைப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
ginger
இலங்கை

இஞ்சி செய்கையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!

ஏற்றுமதி விவசாயத் திணைக்களம், இஞ்சி அழுகல் நோய் குறித்துக் கவனம் செலுத்துமாறு விவசாயிகளுக்கு அறிவித்துள்ளது. குறிப்பாக...

Valikamam Land Release
இலங்கை

காணிவிடுவிப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட ஈ.பி.டி.பி கட்சியின் உறுப்பினர்களிடம் வாக்குமூலம் பதிவு!

பலாலி காணி விடுவிப்பு போராட்டத்தில் கலந்துகொண்டமை தொடர்பில், ஈ.பி.டி.பி கட்சியின் வேலணை பிரதேச சபை உறுப்பினர்...

Colombo Hotel
இலங்கை

பட்டப்பகலில் நடத்தப்பட்ட கைவரிசை – போலி ஆசாமி தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்கள்!

கடந்த 3 ஆம் திகதி, கொழும்பு – கம்பெனி வீதி பொலிஸ் பிரிவில் உள்ள ஒரு...

Cid Investigations 1
இலங்கை

கல்முனை ஆதார வைத்தியசாலை விவகாரம் – தலையிடுகிறதா CID!

அண்மைய நாட்களாக மிகப்பெரிய அளவிலான பேசுபொருளாக காணப்பட்ட கல்முனை ஆதார வைத்தியசாலை முஸ்லிம் பெண்களினுடைய ஆடை...