கணேமுல்லே சஞ்சீவ படுகொலை! அடையாள அணிவகுப்பில் வெளியான முக்கிய தகவல்

3 4

பாதாள உலகக் கும்பல் உறுப்பினர் கணேமுல்லே சஞ்சீவவை சுட்டுக் கொன்ற சந்தேக நபர் தொடர்பில் இன்று அடையாள அணிவகுப்பு ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது சந்தேக நபரை சாட்சிகளால் அடையாளம் காண முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேலதிக நீதவான் இன்று மதியம் இந்த அடையாள அணிவகுப்பை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச் சூடு நடந்த நாளில் நீதிமன்ற அறையில் இருந்த இரண்டு கைதிகள் இதன்போது சாட்சிகளாக முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சந்தேக நபரை அடையாளம் காண முடியாததால் அவரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Exit mobile version