புதிய ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மனபில அரசின் மற்றுமொரு பதவியில் இருந்த விலகியுள்ளார். சீதாவாக்கை பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பதவியில் இருந்து அவர் விலகியுள்ளார்.
இது தொடர்பாக கம்மன்பில ஜனாதிபதிக்குக் கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார்.
வலுசக்தி அமைச்சர் பதவியில் இருந்து தான் நீக்கப்பட்டுள்ளதால், மற்றுமொரு நிறைவேற்று அதிகாரம் கொண்ட பதவியான பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பதவியை தொடர்ந்தும் வகிப்பது பொருத்தமற்றது எனக் கம்மன்பில தனது கடிதத்தில் கூறியுள்ளார்.
அமைச்சரவையில் இருந்துகொண்டு அரசின் நடவடிக்கைகளை விமர்சித்து வந்தனர் என்ற குற்றச்சாட்டில் உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவன்ச ஆகியோரை அமைச்சுப் பதவிகளில் இருந்து ஜனாதிபதி அண்மையில் பதவி நீக்கம் செய்திருந்தார்.
#SriLankaNews
Leave a comment