காலி முகத்திடல் போராட்டக்காரர்கள், கூட்டு பாதுகாப்பு நடவடிக்கைமூலம் வெளியேற்றப்பட்டமை தொடர்பில் நாடாளுமன்றத்தில் நாளை மறுதினம் விவாதம் இடம்பெறவுள்ளது.
குறித்த விவகாரம் பற்றி விவாதிப்பதற்காக இன்று நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு எதிரணி பிரதமர் கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல, பிரதமரிடம் கோரிக்கை விடுத்திருந்தார். எனினும், அந்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
27 ஆம் திகதி அவசரகால சட்டம் தொடர்பில் விவாதிக்கப்படவுள்ளது. அன்றைய தினத்தில் காலிமுகத்திடல் விவகாரம் குறித்து விவாதிக்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews

