Selvarasa Gajendran
அரசியல்இலங்கைசெய்திகள்

சிறப்பு முகாம்களிலுள்ள ஈழத்தமிழர்களை விடுவியுங்கள்! – ஸ்டாலினிடம் கஜேந்திரன் கோரிக்கை

Share

தமிழகத்தின் சிறப்பு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்களின் கோரிக்கையை நிறைவேற்ற தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு இது தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தமிழகத்தின் சிறப்பு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்கள் தொடர்ச்சியாக உண்ணாவிரதம் இருந்து வரும் உடல்நிலை மிகவும் மிகவும் மோசமடைந்துள்ளது. இந்நிலையில், அவர்கள் முன்வைத்த கோரிக்கைகள் இதுவரையில் நிறைவேற்றப்படாதமை உண்மையில் ஏமாற்றத்தையும் மனவேதனையும் தருகின்றது.

இதனைக் கருத்தில்கொண்டு அவர்களை விடுவிப்பதற்கு தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் விருப்பத்துக்கு ஏற்ப தாயகம் திரும்புவதற்கோ அல்லது தொடர்ந்தும் தமிழகத்தில் இருப்பதற்கோ உரிய ஏற்பாடுகளைத் தமிழக முதலமைச்சர் செய்ய வேண்டும்.

இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை போர் காரணமாகவே இங்கிருந்து பலரும் வெளிநாடுகளுக்குச் சென்ற நிலையில், அவ்வாறு வருவர்களுக்கு அடைக்கலம் தருவதாகக் கூறிக்கொண்டே ஈழத்தமிழர்களை சிறப்பு முகாம்களில் அடைத்து வைத்திருப்பது என்பது உண்மையில் ஏற்றுக்கொள்ள முடியாத விடயம். ஆகவே, அவர்களை விடுவிப்பதற்குத் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விடயத்தில் தமிழக முதலமைச்சர் உடனடியாகத் தலையிட்டு அவர்களின் கோரிக்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...