9 9
இலங்கைசெய்திகள்

13ஆம் திருத்தத்தை தமிழரசுக் கட்சி கோருவது இதற்காகவே: அம்பலப்படுத்தும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Share

38 வருடம் நடைமுறைப்படுத்தாத 13ஆம் திருத்தத்தை தற்போது நடைமுறைப்படுத்துமாறு இலங்கை தமிழரசுக் கட்சி கோருவது ஒற்றையாட்சிக்குள் முடக்குவதற்காகவே என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், 13ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த அனைவரும் இணங்கியுள்ளதாக சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். அதற்காக சி.வீ.கே.சிவஞானத்திற்கு நன்றி சொல்ல வேண்டும். தமிழ் தேசிய மக்கள் முன்னணியை தவிர அனைத்து தரப்புக்களும் போருக்கு பிந்தைய காலத்தில் ஒற்றையாட்சிக்குள் உள்ள 13ற்கு இணங்கியிருந்தன.

ஒற்றையாட்சிக்குள் முடக்கப்பட கூடாது. 13ஐ ஆரம்ப புள்ளியாக கொண்டு நகர்த்த முடியாது என சொல்லியே தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறினோம். இந்த நிலையில் அந்த உண்மையை மூடி மறைக்க நாங்கள் சமஷ்டிக் கட்சி எனவும் காங்கிரஸ் ஒற்றையாட்சியை ஏற்றுக்கொண்டது எனவும் தமிழரசுக் கட்சி கடந்த 16 வருடங்களாக மக்கள் மத்தியில் பொய் பரப்புரை செய்தனர்.

13ம் திருத்தத்தை ஏற்கவில்லை என்ற பொய்யை தமிழரசுக் கட்சி தலைவர் தனது அறிவுக்கு ஏற்ற வகையில் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை வழங்கியுள்ளார். வழங்கிய கால கட்டம் மிக முக்கியமானது. இரண்டு கிழமைக்கு முன்னராக 2015 – 2019 காலத்தில் செய்யப்பட்ட ஏக்ய ராஜ்ஜிய வரைபை திருத்தி அதனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றபோவதாக தேசிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி பிரதிநிதிகள் சுவிட்சர்லாந்தில் தெரிவித்தனர்.

ஏக்ய ராஜ்ய என்ற ஒற்றையாட்சி வரைபை உருவாக்க இலங்கை தமிழ் அரசுக் கட்சி பெரும் பங்கு வகித்தது. அந்த வரைவை நடைமுறைப்படுது்த ஹரிணி அமரசூரிய நாடாளுமன்றத்தில் சொல்லியிருக்கிறார். அநுர குமார திஸாநாயக்க சொல்லியிருக்கிறார் என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
25 1
இலங்கைசெய்திகள்

வரலாறு காணாத உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலை

உலகில் தங்கத்தின் விலை முதல் முறையாக ஒரு அவுன்ஸ் 4,000 அமெரிக்க டொலரை தாண்டியுள்ளது. இத்தகவலை...

24 1
இலங்கைசெய்திகள்

எண்பது மில்லியனுக்கு விற்கப்பட்ட நாடாளுமன்ற ஆசனம்

இலங்கையின் நாடாளுமன்ற ஆசனத்தை எண்பது மில்லியன் ரூபாய்க்கு விற்ற நபர் ஒருவர் குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு...

23 1
இலங்கைசெய்திகள்

மின் கட்டண திருத்தம் குறித்து இன்று முக்கிய நகர்வு

இலங்கை மின்சார சபை (CEB), இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையத்திடம் (PUCSL) சமர்ப்பித்த மின்சார கட்டண...

22 1
இலங்கைசெய்திகள்

பேருந்தில் பாடசாலைக்கு சென்ற மாணவனுக்கு மர்ம நபரால் ஏற்பட்ட விபரீதம்

பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த 12 வயது சிறுவனின் வாயில் வலுக்கட்டாயமாக மாத்திரையை திணித்துவிட்டு நபரொருவர் தப்பிச்சென்ற...