எந்த ஒரு விடயமும் தமிழ் மக்களுக்கான தீர்வை பெற்றுத்தராது: கஜேந்திரகுமார்
ஒற்றையாட்சிக்குள் இருக்கும் எந்த ஒரு விடயமும் தமிழ் மக்களுக்கான தீர்வை பெற்றுத்தராது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
யாழ். கொக்குவிலில் அமைந்துள்ள அவரது கட்சி அலுவலகத்தில் நேற்று(25.07.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இச்சந்திப்பில் கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் மற்றும் கட்சியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் ஆகியோரும் கலந்துக்கொண்டிருந்தனர்.
இதன்போது சர்வ கட்சி கலந்துரையாடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடமிருந்து தமக்கு அழைப்பு வந்துள்ளதாகவும் அதனை தமது அமைப்பு நிராகரிப்பதாகவும் அதற்கான காரணங்கள் குறித்தும் கஜேந்திரகுமார் கருத்து வெளியிட்டிருந்தார்.
மேலும் இந்த அழைப்பை ஏற்று செல்ல உள்ள தமிழ்க் கட்சிகள் தொடர்பிலும்13 ஆம் திருத்தம் குறித்தும் எதிர்க் கட்சிகளுடனான பேச்சுவார்த்தை தொடர்பிலும் தமது கருத்தை வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Leave a comment