tamilni 310 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

ஆட்சியை கைப்பற்ற பாடுபடும் ராஜபக்சர்கள்

Share

ஆட்சியை கைப்பற்ற பாடுபடும் ராஜபக்சர்கள்

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமைக்கு காரணமாக உள்ளவர்கள் அடுத்த ஆட்சியை கைப்பற்றுவதற்குரிய திட்டங்களை தொடங்கியுள்ளனர் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.

“மலையகம் 200” எனும் மலையக மக்களின் பெருமையை பறைசாற்றும் நிகழ்வு நேற்று (17.10.2023) மட்டக்களப்பில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கருத்து தெரிவிக்கையில்,

மலையக மக்கள் அந்நிய செலாவணியை இட்டுத் தரும் மக்களாக இருந்தாலும் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு காரணமாக இருந்த குற்றவாளிகள் இன்றும் சுதந்திரமாக நடமாடி திரிகின்றனர்.

மலையக மக்களுடன் வடக்கு கிழக்கு மக்கள் என்றும் கைகோர்த்து இருப்போம்.

அண்மையில் இடம்பெற்ற மொட்டுவின் மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதியை காணவில்லை.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமைக்கு காரணமாக உள்ளவர்கள் அடுத்த ஆட்சியை கைப்பற்றுவதற்குரிய திட்டங்களை தற்போதே தீட்ட தொடங்கியுள்ளனர்.

நமது மாவட்டத்தின் மேய்ச்சல் தரை சம்பந்தமான பிரச்சினைக்கு ஜனாதிபதி சாதகமான பதில் வழங்குகின்ற போதிலும் அரச அதிகாரிகள் அதற்கு செவி சாய்ப்பதில்லை என தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...