24 66220e460d744
இலங்கைசெய்திகள்

பாலித தெவரப்பெருமவிற்கு அஞ்சலி செலுத்திய மகிந்த

Share

பாலித தெவரப்பெருமவிற்கு அஞ்சலி செலுத்திய மகிந்த

மறைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் பாலித தெவரப்பெருமவுக்கு (Palitha Thewarapperuma) முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

அவர் மறைந்த பாலித தெவரப்பெருமவின் (Palitha Thewarapperuma) பூதவுடல் வைக்கப்பட்டுள்ள அவரது இல்லத்திற்கு விஜயம் செய்து இறுதி அஞ்சலி செலுத்தி உள்ளார்.

அங்கு கருத்துத் தெரிவித்த மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa), பாலித தெவரப்பெரும தேசத்தின் குடிமக்களுக்காகவும் அவர்களுக்காகவும் நின்று உழைத்த ஒரு அரசியல்வாதி என் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெருமவின் (Palitha Thewarapperuma) இறுதிக் கிரியைகள் (Funeral) இன்று (19.4.2024) பிற்பகல் 2 மணி அளவில் இடம்பெறவுள்ளன.

பாலித தெவரப்பெரும (Palitha Thewarapperuma) தனது 64 ஆவது வயதில், கடந்த 16 ஆம் திகதி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

தேவரப்பெரும உயிருடன் இருக்கும் போது தானே தயார் செய்த மயானத்தில் பூதவுடல் அடக்கம் செய்யப்படவுள்ளதாக குடும்ப உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
21 9
உலகம்செய்திகள்

10 வருடங்களில் முதன்முறையாக புதுப்பிக்கப்பட்ட Google logo

கூகுள் (Google) நிறுவனம் தனது ‘கூகுள் தேடல்’ செயலியில் உள்ள ‘ஜி’ சின்னத்தைப் புதுப்பித்துள்ளது. கடந்த...

22 8
இலங்கைசெய்திகள்

புதிய பாப்பரசரை சந்தித்த கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித்

கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்(Malcolm Ranjith), புதிதாக நியமிக்கப்பட்ட பாப்பரசர் மற்றும் ரோமன் கத்தோலிக்க...

23 8
இலங்கைசெய்திகள்

தொடர்ந்தும் தலைமறைவாகியுள்ள டீச்சர் அம்மா

இளைஞர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள, சர்ச்சைக்குரிய ஆசிரியை ஹயேசிகா பெர்னாண்டோ தொடர்ந்தும்...

24 7
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சின்னம்மை தடுப்பூசிக்கு தட்டுப்பாடு

இலங்கையில் சின்னம்மை நோயாளிகளின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த நோயைத் தடுக்க உதவும்...