கதவடைப்புக்கு ஆதீனங்கள் பூரண ஆதரவு!

IMG 20230423 WA0118

தமிழ் தேசிய சக்திகளின் ஒருங்கிணைப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள வட கிழக்கு தழுவிய கதவடைப்பு போராட்டத்திற்கு ஏமது பூரண ஆதரவையும் ஆசியையும் வெளிப்படுத்தி நிற்கின்றோம் என வடக்கு கிழக்கு ஆதீனங்கள் அறிவித்துள்ளன.

இது தொடர்பில் வெளியான செய்திக்குறிப்பில்,அண்மைக்கால வெவ்வேறு வடிவங்களில் வீரியம் பெற்றுள்ள தமிழின அழிப்புக்களிற்கு எதிராக ஒட்டுமொத்த தமிழினமும் தமது எதிர்ப்பை தொடர்ச்சியாக பதிவு செய்ய வேண்டியது காலத்தின் தேவையாகும்.

எமக்கான பயனுறுதி வாய்ந்த தீர்வுகள் கிடைக்கும் வரை ஒட்டு மொத்த தமிழ் மக்களின் சிவில் அமைப்புக்களும் தமிழ் தேசிய கட்சிகளும் இணைந்த தொடர் போராட்டத்தின் ஓர் அங்கமாக முன்னெடுக்கப்படும் இந்த கதைவடைப்பை அனைவரும் இணைந்து வலுச்சேர்ப்போம்

இன்று வலியுறுத்தப்படும் எம் அடிப்படை உரிமைகள் மரபுரிமை சார்ந்த பிரச்சினைகளிற்கு சரியான தீர்வுகள் உடனடியாக வழங்கப்படாவிட்டால் அடுத்த கட்ட பாரிய போராட்டங்களிற்கு தமிழ் சமூகம் தயாராக உள்ளது ஏன்பதை அரசும் சர்வதேசமும் புரியும் வகையில் எமது கதவடைப்பு ஒருமித்த ரீதியில் வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் தழுவியதாக அமைய அனைத்து தரப்பினரையும் வடக்கு கிழக்கை சார்ந்ந சைவ ஆதீனங்களாகிய நாம் கேட்டு நிற்கின்றோம்.

அதே நேரம் தமிழ் மக்களின் அபிலாசைகளிற்கு தொடர்ந்து அரசு செவி சாய்காத நிலையில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களின் ஏகோபித்த குரலை பிரதிபலிக்கும் வகையில் கோரிக்கைகள் நிறைவேறும் வரை நாடாளுமன்றத்தை புறக்கணிக்குமாறும் கேட்டு நிற்கின்றோம் என்றனர்.

தென்கயிலை ஆதீனம் தவத்திரு அகத்தியர் அடிகளார், மெய்கண்டார் ஆதீனம் தவத்திரு உமாபதிசிவம் அடிகளார் ஆகியோரே குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

#srilankaNews

 

Exit mobile version