சர்வக்கட்சி அரசுக்கு முழு ஆதரவு! – குமார வெல்கம

kumara welgama 1

” சர்வக்கட்சி அரசுக்கு முழு ஆதரவு வழங்கப்படும். அமைச்சு பதவி வழங்கப்பட்டால் அதனை ஏற்கவும் தயார்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையை சமாளிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே அனுபவம் மிக்க தலைவராக காணப்படுகின்றார், எனவே, அவருக்கு முழு ஒத்துழைப்பும் வழங்கப்படும் எனவும் வெல்கம குறிப்பிட்டார்.

ஏனைய கட்சிகளும் சர்வக்கட்சி கோட்பாட்டுக்கு இணங்க வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்தார்.

#SriLankaNews

Exit mobile version