இலங்கையில் அதிகரித்துள்ள எரிபொருள் விற்பனை

24 664ea2f8d39a4

இலங்கையில் அதிகரித்துள்ள எரிபொருள் விற்பனை

வெசாக் வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில் எரிபொருள் விற்பனை வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில நாட்களாக எரிபொருள் விற்பனை குறைந்திருந்த நிலையில் திடீரென அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சில நாட்களாக எரிபொருள் பாவனை அதிகரித்து வருவதால், எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் வழமையை விட அதிகமான எரிபொருள் இருப்புக்களை விண்ணப்பம் செய்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த வருடத்தின் ஆரம்பம் முதல் எரிபொருள் விற்பனை மிகவும் குறைந்த மட்டத்திலேயே காணப்படுவதாக விநியோகஸ்தர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தமிழ், சிங்கள புத்தாண்டு தினங்களில் மட்டும் சில விற்பனை நடந்ததாக கூறுகிறார்கள்.

மேலும், வெசாக் நிறைவடைந்ததன் பின்னர் எரிபொருள் விற்பனை முன்பு போலவே குறையும் என எரிபொருள் விநியோகஸ்தர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

 

Exit mobile version