11 17
இலங்கைசெய்திகள்

எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் பெற்றோலிய கூட்டுத்தாபனம் விசேட அறிவிப்பு

Share

எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் பெற்றோலிய கூட்டுத்தாபனம் விசேட அறிவிப்பு

உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதால், இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைக்கப்படும் சமூக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பில் எமது ஊடகப்பிரிவு இலங்கை பெட்ரோலி கூட்டுதாபனத்திடம் உயர் அதிகாரி ஒருவரை தொடர்புகொண்டு கேட்ட போது, விலை திறுத்தம் தொடர்பில் இது வரையில் எவ்வித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என சுட்டிக்காட்டினார்.

தற்போது ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகளின் உண்மைத்தன்மை தொடர்பில் இன்று நள்ளிரவுக்குள் உறுதிப்படுத்தப்படும் எனவும் கூறினார்.

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் பிரகாரம், இன்று (31) நள்ளிரவு முதல் எரிபொருளின் விலைகள் திருத்தப்படாது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் எரிபொருளை முன்பதிவு செய்யாத காரணத்தினால் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரி ஒருவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இதனை கூறியுள்ளார்.

இந்நிலைமை தொடர்பில் அவதானம் செலுத்தியதன் காரணமாகவே விலை திருத்தம் தொடர்பில் மேற்படி தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக விளக்கமளித்துள்ளார்.

மேலும் இது தொடர்பில் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச சந்தையில், ஜூலை 1 ஆம் திகதி வரை 82.38 டொலராக பதிவு செய்யப்பட்ட W.T.I. கச்சா எண்ளை நேற்று 75.30 டொலராக குறைந்துள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...