எரிபொருள் வரிசை மரணம் மூன்று – ஆனால் கொலை!!

Parliament 01

எரிபொருள் வரிசை மரணத்தின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது. குறித்த சம்பவம் நிட்டம்புவ, ஹொரகொல்ல எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,

மோட்டார் சைக்கிள் ஓட்டுனருக்கும் முச்சக்கர வண்டி சாரதிக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில், 29 வயது மோட்டார் சைக்கிள் சாரதி ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (20) இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த இருவரும் எரிபொருளை பெறுவதற்காக வந்துள்ள நிலையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

இதன் பின்னர் எரிபொருளை பெற்றுக்கொண்ட முச்சக்கரவண்டி சாரதி தொடர்ந்து எரிபொருளை பெற்று வந்த மோட்டார் சைக்கிள் சாரதியை, கூரிய ஆயுதத்தால் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து காயமடைந்த நபர் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

சடலம் தற்போது வத்துபிட்டிவல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய முச்சக்கரவண்டி சாரதியை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளில் நிட்டம்புவ பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

#SrilankaNews

 

 

Exit mobile version