எரிபொருள் நெருக்கடி! – மீண்டும் இருளாகும் நாடு?

norochchola power

தற்போதைய எரிபொருள் நெருக்கடி நிலை காரணமாக மின் நிலையங்களில் ஒரு சில நாட்களுக்கான எரிபொருள் இருப்பில் உள்ளது என மின்சார பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தில் ஒரு நாளுக்கான எரிபொருள் மட்டுமே இருப்பதாகவும், சபுகஸ்கந்த அனல்மின் நிலையத்தின் இரண்டு இயந்திரங்களில் சுமார் 4 நாட்களுக்கு எரிபொருள் எண்ணெய் இருப்பதாகவும், வெஸ்ட்கோஸ்ட் அனல்மின் நிலையத்தில் ஒரு நாளுக்கு தேவையான எரிபொருள் எண்ணெய் இருப்பு மட்டுமே இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சோஜிஸ்ட் மின் உற்பத்தி நிலையம் மற்றும் வடக்கு ஜனனி மின் உற்பத்தி நிலையம் ஆகியவை எரிபொருள் பற்றாக்குறையால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

தற்போது, நீர் மின் உற்பத்தி நிலையங்கள் ஓரளவு இயங்குவதால் மின் வழங்கலை ஓரளவு சமாளிக்க முடிகின்றது எனவும் மின்சார பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

#SriLankaNews

Exit mobile version