எரிபொருள் வரிசையில் காத்திருந்த நபரொருவர் இன்று (29) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் பலியாகியுள்ளார்.
அளுத்கம, தர்கா நகர் பகுதியில் வசிக்கும் 53 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
எரிபொருள் பெறுவதற்காக தர்கா நகரிலுள்ள எரிபொருள் நிலைய வளாகத்தில் நேற்று இரவு முதல் வரிசையில் காத்திருந்த அவர், இன்று அதிகாலை வீடு செல்லும்போது, டிப்பரொன்று மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
டிப்பர் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
#SriLankaNews