சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழுவும், அக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று முற்பகல் கட்சி தலைமையகத்தில் கூடுகிறது.
பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதா, அல்லது இவ் விவகாரத்தில் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பன குறித்து ஆராயப்படவுள்ளது.
மத்திய குழுவால் எடுக்கப்படும் முடிவு, குறித்து நாடாளுமன்றக்குழு மற்றும் நிறைவேற்றுக்குழுவில் ஆராயப்பட்டு இறுதியான தீர்மானம் அறிவிக்கப்படும் என்று கட்சியின் பொதுச்செயலாளர் அறிவித்துள்ளார்.
#SriLankaNews