சாதாரண தர மாணவர்களுக்கு இலவச கருத்தரங்கு

20220814 080525

கல்வி பொதுத்தராதர சாதாரண தர மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கொன்று இன்றைய தினம் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது.

வடமாகாணத்திலுள்ள மாணவர்கள் பயன்பெறும் வகையில் சட்டத்தரணி வேலாயுதம் தேவசேனாதிபதியின் கொழும்பு அருள் கல்வி வட்டத்தின் அனுசரணையுடன் இந்த கருத்தரங்கு முன்னெடுக்கப்பட்டது.

இந்த கருத்தரங்கில் பங்குபற்றிய மாணவர்களுக்கு கடந்த கால சாதாரண தர வினாத்தாள்கள் விடைகள் அடங்கிய புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டதுடன் யாழ் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கருத்தரங்கில் பங்கேற்பதற்காக மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த கருத்தரங்கு தொடர்ச்சியாக வடமாகாணத்தில் இடம்பெற்று வருகின்ற நிலையில் நாளை திங்கட்கிழமை (15) கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்திலும் செவ்வாய்க்கிழமை மாங்குளத்தில் அமைந்துள்ள மாகாண தொழில்நுட்பக் கல்லூரியிலும் புதன்கிழமை(17) முல்லைத்தீவு ஊற்றங்கரை விநாயகர் ஆலய மண்டபத்திலும் வியாழக்கிழமை(18) மன்னார் நகர சபை மண்டபத்திலும் வெள்ளிக்கிழமை(19) வவுனியா நகரசபை மண்டபத்திலும் இடம்பெறவுள்ளது.

#SriLankaNews

 

Exit mobile version