இலங்கையில் பெண்களுக்கான இலவச தொலைபேசி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்சவின் அறிவுறுத்தலுக்கு அமைய பெண்களின் பாதுகாப்புக்காக இந்த இலவச தொலைபேசி சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
1938 என்ற தொலைபேசி சேவையை அறிமுகம் செய்யும் நடவடிக்கை மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி, ஆரம்ப கல்வி மற்றும் பாடசாலை உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா தலைமையில் பத்திரமுல்லவில் நடைபெற்றது.
இந்த விசேட தொலைபேசி எண்ணானது 24 மணிநேரமும் இயங்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் நாட்டின் எந்தப் பகுதியிலும் கட்டணமின்றி 1938 எனும் இலக்கத்துக்கு அழைப்பை மேற்கொண்டு பெண்களுக்கான இடையூறுகள் , பிரச்சினைகள், துன்புறுத்தல்கள், பாலியல் வன்முறைகள் தொடர்பில் தெரியப்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
#srilanka