download 26 1 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தாலிக்கொடி செய்து தருவதாக மோசடி!

Share

தாலிக்கொடி செய்து தருவதாக கூறி 12 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் மற்றும் பணத்துடன் தலைமறைவான நபர் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர், திருமணத்திற்கு தாலி செய்து தருவதற்காக குறித்த நபரிடம் ஒரு தொகை நகை மற்றும் பணம் என்பவற்றை மணமகன் வீட்டார் வழங்கியுள்ளனர்.

அவற்றின் பெறுமதி 12 இலட்சம் ரூபாய் என தெரிவிக்கப்படுகிறது.

நகை மற்றும் பணத்தினை பெற்றுக்கொண்டவர் திருமணத்திற்கு முதல் நாள் தாலியை தருவதாக உறுதி அளித்துள்ளார்.

அதன் அடிப்படையில், திருமணத்திற்கு முதல் நாள் தாலியை வாங்க சென்ற போது, அவரது கடை மூடப்பட்டு இருந்தது.

அவருக்கு தொலைபேசி அழைப்பு எடுக்கப்பட்ட போது, தொலைபேசி துண்டிக்கப்பட்டு இருந்தது.

அதனை அடுத்து மணமகன் வீட்டார், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து, பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து இருந்த நிலையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 21 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏப்ரல் முதல் வாகனங்களுக்குப் புதிய வரி! – அவசரப்பட்டு வாகனங்களை வாங்க வேண்டாம் என இறக்குமதியாளர்கள் சங்கம் கோரிக்கை!

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் 1, 2026 முதல் 2.5 சதவீத சமூக...

image 1200x800 20 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வைத்தியர் சத்தியமூர்த்தி அதிரடி முறைப்பாடு! – மக்கள் எழுச்சி கட்சி நிறுவனருக்கு எதிராகப் பொலிஸார் விசாரணை!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி அவர்கள், அகில இலங்கை மக்கள் எழுச்சி...

image 1200x800 19 2
செய்திகள்இந்தியா

இஸ்ரேல் செல்லும் பிரதமர் மோடி! – 56 இராணுவ நிறுவனங்களுக்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் பிப்ரவரி 25-ஆம் திகதி இஸ்ரேலுக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ...

001
செய்திகள்அரசியல்இலங்கை

சிஐடி-யில் ஆஜராகிறார் பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க! – நிதி துஷ்பிரயோக வழக்கில் பரபரப்பு விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நிதி முறைகேடு தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, அவரது...