பிரான்ஸில் மணி குழுவினர்!

Manivannan team 1

யாழ். மாநகர சபை விசுவலிங்கம் மணிவண்ணன், யாழ். மாரநகர சபை உறுப்பினர் வ.பார்த்தீபன் மற்றும் நல்லூர் பிரதேச சபைத் தவிசாளர் மயூரன் ஆகியோர் உத்தியோகபூர்வ பயணமாக பிரான்ஸ் நாட்டுக்குச் சென்றுள்ளனர்.

மணிவண்ணன் குழுவினரைப் பிரான்ஸ் சர்வதேச விமான நிலையமான பாரிஸ் சார்ள்ஸ் டி கோலில் பிரான்ஸ் வாழ் தமிழ் மக்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

பிரான்ஸ் நாட்டு மாநகர சபைகளின் மேயர்கள், பிரான்ஸ் நாடாளுமன்ற மக்கள் பிரதிநிதிகள், பொது அமைப்புக்கள் மற்றும் புலம்பெயர் தமிழர்களின் அழைப்பை ஏற்று இவர்கள் அங்கு சென்றுள்ளனர்.

பிரான்ஸ் மாநகர மேயர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொது அமைப்புக்களுடனான சந்திப்புக்களிலும், புலம்பெயர் தமிழர்களுடனான மக்கள் சந்திப்புக்களிலும் மணிவண்ணன் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

#SriLankaNews

Exit mobile version