பேரிடர் மீட்புப் பணிகளுக்கு உதவ பிரான்ஸ் உறுதி: நிபுணர் குழுவை அனுப்பத் திட்டம்!

articles2FD806QCvPd8dQkzGUvxWn

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ரெமி லம்பேர்ட் (Remi Lambert) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (டிசம்பர் 9) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்தச் சந்திப்பின்போது பிரான்ஸ் தூதுவர், இலங்கையின் பேரிடர் மீட்பு மற்றும் புனரமைப்புப் பணிகளுக்கு உதவ பிரான்ஸ் அபிவிருத்தி முகவர் நிறுவனம் (AFD) ஆதரவு அளிக்கும் என உறுதியளித்தார்.

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும், இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு பிரான்ஸ் ஆதரவளிக்கும்.

இதற்காக எதிர்காலத்தில் நிபுணர்கள் குழுவை நாட்டிற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரான்ஸ் தூதுவர், ஜனாதிபதியின் செயலாளரிடம் உறுதியளித்தார்.

Exit mobile version