கந்தளாய் குளத்தின் 4 வான்கதவுகள் திறப்பு: வினாடிக்கு 750 கன அடி நீர் வெளியேற்றம்!

1637156252 Damgates 2

கந்தளாய் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக, கந்தளாய் குளத்தின் நீர் மட்டம் மீண்டும் அபாய கட்டத்தை எட்டியதையடுத்து, குளத்தின் நான்கு வான்கதவுகளும் இரண்டாவது முறையாக இன்று (ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 14) திறக்கப்பட்டுள்ளன.

குளத்தின் நான்கு வான்கதவுகளும் ஒரு அடிக்கு திறக்கப்பட்டுள்ளன. கந்தளாய் குளத்தின் மொத்த நீரின் கொள்ளளவு 114,000 கன அடி ஆகும்.

கன மழை காரணமாக நீரின் கொள்ளளவு தற்போது 98,895 கன அடியாக உயர்ந்துள்ளது. தற்போது வினாடிக்கு 750 கன அடி அளவு நீர் வெளியேறி வருகின்றது. இந்தத் தகவலை கந்தளாய் நீர்ப்பாசனப் பொறியியலாளர் சிந்தக்க சுரவீர தெரிவித்துள்ளார்.

காலநிலை மாற்றத்தின் தாக்கமாக, கந்தளாய் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 13) முதல் தொடர்ந்து அடைமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கரையோரப் பகுதி மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Exit mobile version