வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக முன்னாள் தலைவர் ஹில்மி அஸீஸ் பிணையில் விடுதலை!

hilmi

இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்ட இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் (SLBFE) முன்னாள் தலைவர் ஏ.ஏ.எம். ஹில்மி அஸீஸ் இன்று (டிசம்பர் 9) நீதிமன்றத்தால் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

இஸ்ரேலுக்குத் தொழிலாளர்களை அனுப்பியதில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் மோசடி தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

நவம்பர் 25ஆம் திகதி இவர் கைது செய்யப்பட்டு, டிசம்பர் 9ஆம் திகதி வரையில் நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version