2 53
இலங்கைசெய்திகள்

தமிழ் கைதியை துப்பாக்கி முனையில் மிரட்டிய முன்னாள் அமைச்சர்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

Share

தமிழ் கைதியை துப்பாக்கி முனையில் மிரட்டிய முன்னாள் அமைச்சர்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

அனுராதபுரம் சிறைச்சாலைக்குள் இரவில் நுழைந்து, தமிழ் கைதியின் நெற்றியில் துப்பாக்கியை வைத்து மிரட்டிய குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்த மீதான வழக்கானது எதிர்வரும் ஏப்ரல் மாதம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தினால் நேற்று(30.01.2025) குறித்த  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வரவிருந்த போதிலும், அனுராதபுரம் தலைமை நீதிபதி நாலக சஞ்சீவ ஜெயசூரியா திடீரென விடுமுறை எடுத்ததால், ஏப்ரல் 24 ஆம் திகதி மீண்டும் வழக்கை விசாரிக்குமாறு செயல் நீதிபதியால் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இந்த சம்பவம் தொடர்பாக சிறைச்சாலை தரப்பு நடத்திய விசாரணையின் அறிக்கையானது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குறித்த வழக்கில் பாதிக்கப்பட்ட தரப்பினரின் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரனி எம்.ஏ. சுமந்திரன், கேசவன் சஜந்தன் மற்றும் பெனஸ்லான் ஆகியோர் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 161
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்துகளால் 713 பேர் பலி: வாகன ஓட்டுநர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

தற்போது நிலவி வரும் பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும், கவனக்குறைவாகச் செயல்படுவதையும் தவிர்க்குமாறு இலங்கை...

world 160
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நிகழ்ந்த விபத்துக்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள்: பொலிஸாரின் அதிரடி சோதனைகள்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் பொலிஸ் சோதனைகளில் பலர்...

world 159
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பட்டாசு வெடிக்கும் போது அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது எதிர்பாராத விதமாக இடம்பெறும் பட்டாசு விபத்துகளைத் தடுப்பது குறித்து சுகாதார...

world 158
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கல்கிசையில் மோதல்: இலங்கை பெண்ணைத் தாக்கிய உக்ரைன் பெண் விளக்கமறியலில்!

கல்கிசையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பாக கடந்த 12ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம்...