ஜனாதிபதியை பதவி விலகக் கோரி முன்னாள் கிரிக்கெட் வீரர் தம்மிக்க உணவு தவிர்ப்பு போராட்டத்தில்!

image 96bed84c22

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துக்கு நீதி வேண்டும் என கோரியும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தம்மிக்க பிரசாத் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் இறங்கியுள்ளார்.

இன்று காலை காலி முகத்திடலுக்கு வந்த அவர், இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டு, போராட்டத்தை தொடர்ந்தார். 24 மணிநேரம் தனது போராட்டம் தொடரும் எனவும் அவர் அறிவிப்பு விடுத்தார்.

அத்துடன், காலி முகத்திடலில் 7 ஆவது நாளாகவும் தொடரும் போராட்டத்துக்கு மேலும் பல கலைஞர்கள் இன்று ஆதரவு தெரிவித்தனர்.

#SriLankaNews

Exit mobile version