கோட்டா அரசுக்கு எதிராக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் ஆர்ப்பாட்டம்!

கோட்டா அரசுக்கு எதிராக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் ஆர்ப்பாட்டம்

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் ஆட்சி மாற்றத்தைக் கோரி நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், நாட்டுக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ள வெளிநாட்டு பயணிகளும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கமைவாக காலி – கொழும்பு பிரதான வீதி, அக்குறல பாலத்துக்கு அருகில் இன்று காலை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசுக்கு எதிரான பதாதைகளைத் தாங்கியவாறு அவர்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

இலங்கையில் அமுல்படுத்தப்படும் மின்வெட்டு நடைமுறை காரணமாக தாம் பாதிக்கப்பட்டுள்ளதாக இதன்போது அவர்கள் தெரிவித்தனர்.

#SriLankaNews

 

Exit mobile version