விரைவில் இராஜாங்க அமைச்சர்கள் நியமனம்!

parli

இராஜாங்க அமைச்சர்கள் நியமனம் விரைவில் இடம்பெறவுள்ளதென அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

சர்வக்கட்சி அரசில் அமைச்சரவை நியமிக்கப்பட்டிருந்தாலும், இன்னும் இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படவில்லை.

இந்நிலையிலேயே விரைவில் இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள் என தெரியவருகின்றது.

அதேவேளை, நிதி அமைச்சர் பதவியில் மாற்றம் வரலாம் என தெரியவருகின்றது.

பிரதமரிடமிருந்து நிதி அமைச்சு பறிக்கப்படலாம் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது.

#SriLankaNews

Exit mobile version