tamilni 248 scaled
இலங்கைசெய்திகள்

இஸ்ரேல் – பாலஸ்தீன் மோதலால் பாதிப்படைந்த வெளிநாட்டு வேலைவாய்ப்புகள்

Share

இஸ்ரேல் – பாலஸ்தீன் மோதலால் பாதிப்படைந்த வெளிநாட்டு வேலைவாய்ப்புகள்

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனுக்கு இடையிலான மோதலால் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அனுமதிக்கப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஹர்ஷாத் தெரிவித்துள்ளார்.

குறித்த நாடுகளுக்கு 400 பேர் வரை வேலைவாய்ப்பிற்காகச் சென்றுள்ளனர். தற்போது 120 இக்கு மேற்பட்ட வேலைவாய்ப்பு விண்ணப்பங்கள் கிடைத்துள்ள போதிலும், அவர்களை வேலைவாய்ப்புக்காக அனுப்புவதை நிறுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சட்டரீதியாக வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு 6000 பணியாளர்களே சென்றுள்ளனர். எனினும் 8000 பேர் வரை சட்டவிரோதமாக மத்திய கிழக்கு நாடுகளில் தங்கியுள்ளனர்.

எவ்வாறு இருப்பினும் இஸ்ரேலில் உள்ள எந்தவொரு இலங்கையரும் இதுவரை நாடு திரும்ப வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கவில்லை. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனுக்கு இடையிலான போரில் நடுநிலை வகிப்பதே பொருத்தமானது.

அத்துடன் இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு குறித்து நாங்கள் பொறுப்பேற்க முடியாது. அவர்களின் பாதுகாப்புக்கு தேவையான முன்னேற்பாடுகளை இலங்கை தூதரகம் ஊடாக முன்னெடுத்துள்ளோம்” என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...