நாட்டில் உணவுப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்படவுள்ளன.
இது தொடர்பில் அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத்,
நாட்டில் உணவகங்களை இல்லாது ஒழிக்கும் துர்ப்பாக்கிய நிலைக்கு, தற்போதைய அரசாங்கம் செயற்பட்டு வருகிறது. தொடர்ச்சியாக எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டு வரும் நிலையில், சிறிய , நடுத்தர மற்றும் பாரிய உணவக உரிமையாளர்கள் மிகுந்த சிரமங்களுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், உணவுப்பொதி ஒன்றின் விலையை 10 ரூபாவால் அதிகரிக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது – எனது தெரிவித்துள்ளார்,.
இதேவேளை, பேக்கரி பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட உள்ளன என தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNew