உணவுப் பொருட்களின் விலைகளும் குறைப்பு

rice and curry with plain tea

சோறு, கறி மற்றும் சாதாரண தேநீர் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளன.

நாளை முறுத்தினம் திங்கட்கிழமை தொடக்கம் இந்த விலை குறைப்பு அமுலுக்கு வரவுள்ளது.

இதேவேளை, எரிவாயு, எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அண்மையில் குறைக்கப்பட்ட நிலையில், அவற்றின் அடிப்படையிலேயே இந்த விலைகளைக் குறைக்க தீர்மானித்ததாக உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

மேலும், பொருளாதார நெருக்கடி மாஸ்ரரும் விலை அதிகரிப்பு காரணமாக நாட்டிலுள்ள சுமார் 60% உணவகங்கள் மூடப்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும், எரிவாயு கிடைப்பதன் மூலம் சில உணவகங்கள் தற்போது மீண்டும் செயற்படத் தொடங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், 10% முதல் 15% வரையிலான விலை குறைப்பு திங்கட்கிழமை அமுல்படுத்தப்படும் என்று கூறிய அவர், எரிவாயு சிலிண்டர்களின் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டதும் இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Exit mobile version